திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாண்டிக்குடியில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளது. இரவு நேரங்களில் வாகனங்களில் வருவோர் சாலையில் உலா வரும் யானைகளால் அச்சத்துடனே பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. உணவைத் தேடி, தாண்டிக்குடியில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற அருள்மிகு பாலமுருகன் கோயிலுக்கு வந்த 2 யானைகள், அங்குள்ள சமையல் அறை மற்றும் உணவு சமைத்து வைக்கப்படும் அறையை உடைத்து சேதப்படுத்தின.