தரங்கம்பாடி: மீன் பிடித்து துறைமுகத்தில் 3050 நாட்டுப் படகுகளை மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்
தமிழ்நாட்டில் மீன்பிடித் தடைக்காலம் இம்மாதம் 14-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தயாராகி வருகின்றனர். இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 28 கடலோர மீனவ கிராமங்களில் உள்ள 2400 பதிவுசெய்யப்பட்ட படகுகள் மற்றும் 650 பதிவுசெய்யப்படாத படகுகள் என மொத்தம் 3050 நாட்டுப்படகுகளை மீன்வளத்துறை அதிகாரிகள்  ஆய்வு செய்தனர்.