திருப்பத்தூர்: திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு வீல் சேர் வழங்கிய தமுமுகவினர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 31-ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பிஸ்கட், பிரட் போன்ற உணவுப் பொருட்களும், நடக்க இயலாதவர்களுக்கு வீல் சேரும் வழங்கப்பட்டன.தமுமுக மருத்துவ சேவையணி மாவட்ட செயலாளர் காஜாமைதீன் தலைமையில், தொண்டரணி ராமநாதபுரம் மண்டல செயலாளர் டாக்டர்.ராஜா முகமது உள்பட பலர் இருந்தனர்