விருதுநகர்: சத்திரரெட்டியபட்டி ஊராட்சி காவேரி நகரில் அம்மா பூங்காவையும் உடற்பயிற்சி கூடத்தையும் சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் சத்திரரெட்டியபட்டி ஊராட்சி காவேரி நகரில் ஊராட்சி ஒன்றிய நிதி ரூபாய் 30 லட்சம் மதிப்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சுமார் அரை ஏக்கர் நிலப்பரப்பில் அம்மா பூங்கா அமைக்கப்பட்டது பூங்காவில் உள்ள சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களும் உடற்பயிற்சி கூடத்தில் உள்ள உடற்பயிற்சி சாதனங்கள் உடைந்து பழுதடைந்து உள்ளன. உடற்பயிற்சி சாதனங்கள் பல திருடு போய் உள்ளன. பூங்காவையும் உடற்பயிற்சி கூடத்தையும் சீரமைக்க பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்