அமைந்தகரை: கோயம்பேடு அருள்மிகு ஸ்ரீ பெருங்காளீஸ்வரர் கோவிலில் தேர் சோதனை ஓட்டத்தை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்
கோயம்பேடு அருள்மிகு ஸ்ரீ பெருங்காலி ஈஸ்வரர் கோவிலில் புதிய தேரின் சோதனை ஓட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர்பாபு துவங்கி வைத்து பக்தர்களுடன் சேர்ந்து தேரை இழுத்தார். ருத்ர தோஷத்தை போக்குவதில் இக்கோவில் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் கோவிலின் விழாக்களில் புதிய தேர் கூடுதல் அம்சமாக இருப்பதாகவும் ஆன்மீக முக்கியத்துவத்தையும் கோவிலின் விழாக்களையும் புதிய தேர் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் பி கே சேகர்பாபு தெரிவித்தார்