விளாத்திகுளம்: ஆதனூர் பகுதியில் புதிய பாலம் அமைக்கும் பணி எம்எல்ஏ துவக்கி வைத்தார்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆதனூர் பகுதியில் கல்லாற்றின் குறுக்கே கிராம சாலை மேம்பாட்டு நிதியில் இருந்து 9.23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக பாலம் அமைக்கும் பணி துவங்கியது. இந்த பணியை விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜிவி மார்க்கண்டேயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன் மற்றும் அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்