குஜிலியம்பாறை: வாணிக்கரையில் இரவு பகலாக மண் அள்ளிய வாகனத்தை சிறைபிடித்த விவசாயிகள்
குஜிலியம்பாறை தாலுகா வாணிக்கரை ஊராட்சி கன்னிமார் குளத்தில் கடந்த 10 நாட்களாக இரவு பகல் பாராமல் ஹிட்டாச்சி எந்திரம் மூலம் பத்துக்கும் மேற்பட்ட லாரிகள் வைத்து மண் கொள்ளை நடைபெறுவதாக கிராம மக்கள் புகார் அளித்தனர். புகாரின் மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு கன்னிமார் குளத்திற்கு சென்றனர். லாரிகள் அனைத்தும் தப்பிவிட்ட நிலையில் ஹிட்டாச்சி எந்திரம் மட்டும் அங்கு இருந்தது. கிராம மக்கள் வருவதை அறிந்த டிரைவர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.