நத்தம்: கோவில்பட்டியில் உள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கைலாசநாதர் கோயிலில் 1008 சங்காபிஷேக விழா நடைபெற்றது
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோவில்பட்டியில் உள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கைலாசநாதர் கோயிலில் கார்த்திகை மாத முதல் சோமவார விழா நடந்தது. இதையொட்டி கோயில் வளாகத்தில் 1008 சங்குகளால் சிவபெருமானை லிங்க வடிவத்தில் வில்வ இலை மற்றும் மலர்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத பூஜைகள் நடந்தது.