மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 9வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாகை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது கட்சியின் அமைப்பு செயலாளர் ஆசைமணி தலைமையில் நாகை நகர செயலாளர் தங்கக் கதிரவன் முன்னிலையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்