அருப்புக்கோட்டை: காந்தி நகரில் டீ போட்டு கொடுத்து தேமுதிக வேட்பாளரான அண்ணன் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த தம்பி சண்முக பாண்டியன்.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக அவரது உடன்பிறந்த தம்பி சண்முக பாண்டியன் இன்று ஏப்ரல் 12 அருப்புக்கோட்டை நகர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கேப்டன் விஜயகாந்தின் மறு உருவமாக அண்ணன் விஜய பிரபாகரன் உள்ளார். என்னுடைய அண்ணனை வெற்றி பெற வைத்தால் அப்பா ஆன்மா சாந்தி அடையும் என பேசி வாக்கு சேகரித்தார்.