வேடசந்தூர்: தாடிக்கொம்பு அருகே சொகுசு பஸ் கவிழ்ந்து விபத்து 22 பேர் காயம்
தேனியில் இருந்து தனியார் சொகுசு பேருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்ஸில் 50 பயணிகள் பயணம் செய்தனர். பஸ் தாடிக்கொம்பு அருகே உள்ள குடகனாறு பாலம் முன்பாக வந்த பொழுது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் எட்டு மாத குழந்தை பத்து பெண்கள் பதினோரு ஆண்கள் என 22 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்த தாடிக்கொம்பு போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.