ராஜசிங்கமங்கலம்: அண்ணாமலை நகரில் நாய்கள் கடித்து குதறியதால் 2 ஆடுகள் பலி
ஆர் எஸ் மங்கலம் அருகே அண்ணாமலை நகர் பகுதியில் சேர்ந்த சீப்பன் மகன் மணிமுத்து (65) முதியவர் ஆன இவர் 50க்கும் மேற்பட்ட ஆடுகள் மேய்த்து பிழைப்பு நடத்தி வருகிறார். இன்று  ஆடுகளை கிடையில் கட்டிப்போட்டுவிட்டு வெளியில் சென்று வந்து பார்த்தபோது கிடையில் கட்டி வைத்திருந்த ஆடுகள் 7க்கும் மேற்பட்ட ஆடுகளை நாய்கள் கடித்து குதறி உள்ளது. அருகில் இருந்தவர்கள் விரட்டியதில் நாய்கள் ஓடிவிட்டது சம்பவ இடத்திலேயே இரண்டு ஆடுகள் பலியானது ஐந்துக்கும் மேற்பட்ட ஆடுகள் படுகாயம் அடைந்த நிலையில் ஆர் எஸ் மங்கலம் அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது