சிவகங்கை: புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிவகங்கை நகர் பெருமாள் கோவிலில் குவிந்த பக்தர்கள்.நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம்.
சிவகங்கையில் உள்ள பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். வேண்டுதல் வைத்தவர்கள் விளக்கு ஏற்றினர். உற்சவர் பெருமாளுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தன. பக்தர்கள் "கோவிந்தா" கோஷத்துடன் வழிபட்டனர்.