கார்த்திகை தீபத்திருநாள் : ஓசூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மகாதீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று 2668 உயரமுள்ள மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. அதேபோல தமிழகத்தில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் கார்த்திகை தீபங்கள் ஏற்றி பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.