ஆவடி: காரம்பாக்கம் பகுதியில் கடை ஒன்றில் குட்கா பொருட்கள் விற்பனை செய்த நபர் கைது
சென்னை வளசரவாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் இன்று காலை சோதனை செய்த போலீசார் காரம்பாக்கம் பகுதியில் உள்ள கடை ஒன்றில் ஆய்வு செய்தனர். அந்தக் கடையில் குட்கா பொருட்கள் இருப்பது உறுதியானதால் கடை உரிமையாளர் ரன்வீர்ராஜ் (28) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 14 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.