நத்தம்: நத்தத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான மனித சங்கிலி
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ரவுண்டானா அருகே வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் நத்தம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் மனித சங்கிலி நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் நீண்ட வரிசையில் கைகளை கோர்த்தபடி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி விழிப்புணர்வு மனித சங்கிலியில் கலந்து கொண்டனர்.