அருப்புக்கோட்டை: செட்டிகுறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு ஆதரவாக அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பு.
அருப்புக்கோட்டை ஒன்றிய பகுதிகளில் ஏப்ரல் 13 காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு ஆதரவாக அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். செட்டிக்குறிச்சி வாழ்வாங்கி, வதுவார்பட்டி, சுக்கிலநத்தம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார் அப்போது பேசிய அவர் மோடி ஆட்சியால் விலைவாசியை உயர்ந்துள்ளதாக குற்றம் சாட்டினார்.