குஜிலியம்பாறை: பாளையம் அருகே மின் டிரான்ஸ்பார்மரில் தீ விபத்து
குஜிலியம்பாறை தாலுகா பாளையத்தில் இருந்து அரவக்குறிச்சி செல்லும் சாலையில் அசோக் டீக்கடை அருகே சாலையோரம் இருந்த டிரான்ஸ்பார்மரில் திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர் பொதுமக்கள் உதவியுடன் ரோட்டில் இருந்த மண்ணை அள்ளி கொட்டி தீயை அணைத்தார். உடனடியாக தீ அவிக்கப்பட்டதால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் இல்லை.