அரியலூர் மாவட்டம் வாரியங்காவல் பகுதியை சேர்ந்த மணிவண்ணன் நேற்று இரவு மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்துவிட்டு, மது போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அதிக வாந்திபேதி காரணமாக குடும்பத்தினர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் மணிவண்ணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.