நத்தம்பேருந்து நிலையம் எதிரே டிபார்ட்மென்டல் ஸ்டோர் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது கடைக்குள் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதைப் பார்த்த ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு கடையில் இருந்து வெளியே ஓடிவந்தனர். இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு டிபார்ட்மென்டல் ஸ்டோரில் பொருட்கள் அடுக்கி வைக்கும் ரேக்கில் இருந்து சுமார் 4 4 அடி நீளமுள்ள கொம்பேறிமூக்கன் பாம்பை உயிருடன் பிடித்து நத்தம் வனத்துறையில் ஒப்படைத்தனர்