தூத்துக்குடி: முள்ளக்காடு சாமி நகர் பகுதியில் மது குடிக்க பணம் கேட்டு ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்த இரண்டு ரவுடிகள் கைது
முள்ளக்காடு சாமி நகர் பகுதியில் சார்ந்த ஒருவரிடம் மது குடிக்க பணம் ரூ.1000 கேட்டு அவர் மறுக்கவே மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். தூத்துக்குடி முள்ளக்காடு முனியசாமி நகர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் தர்மா முனீஸ்வரன் மற்றும் தூத்துக்குடி முள்ளக்காடு ராஜிவ் நகர் 7வது தெரு பகுதியைச் சார்ந்த மாரியப்பன் மகன் பாலா ஆகிய இருவரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.