தூத்துக்குடி: மாவட்டத்தில் கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
கடந்த 26.10.2025 அன்று தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தை சேர்ந்த திரவியராஜ் (எ) ராஜு பாய், அருண் குமார் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் கடந்த 26.10.2025 அன்று ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன் (எ) சிலிண்டர் கைதானார்.