குஜிலியம்பாறை: கோவிலூரில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் கொத்தனார் பலி
குஜிலியம்பாறை தாலுகா ஆர். கோம்பை இருளகவுண்டன்பட்டி சேர்ந்த முருகன் மகன் கோவிந்தராஜ் கொத்தனார். இவர் இருசக்கர வாகனத்தில் கோவிலூர் குஜிலியம்பாறை ரோட்டில் சென்ற போது ராமநாதபுரம் சுப்புராஜ் ஓட்டி வந்த டூவீலருடன் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் காயம் அடைந்த கோவிந்தராஜ் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். சுப்புராஜ் சிகிச்சையில் உள்ளார். எரியோடு போலீசார் விசாரிக்கின்றனர்.