சாத்தான்குளம்: நடுவக்குறிச்சி மிகாவேல் ஆலயத்தில் வாக்காளர்கள் நீக்கம் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக திருமண்டல தேர்தல் நிறுத்தி வைப்பு
தென்னிந்திய திருச்சபையின் கீழ் செயல்படும் தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவுப்படி இன்று ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி கண்காணிப்பின் பேரில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பெருமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து தேவாலயங்களிலும் நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தேவாலயங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.