தூத்துக்குடி: பட்டினமருதூர் கடற்கரை பகுதி வழியாக இலங்கைக்கு கடத்த 2 சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட சுமார் ரூ.15 லட்ச மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல் 2 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் அருகே உள்ள பட்டினமருதூர் கடற்கரையில் இருந்து படகு மூலம் பீடி இலைகள் கடத்தப்படுவதாக க்யூ பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் விஜய அனிதாவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் க்யூ பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த TATA ACE , BOLERO MAXITRUCK ஆகிய இரண்டு லோடு வேன்களில் நிறுத்தி சோதனையிட்டனர்.