ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள நரிப்பையூர் கோவில் தெருப்பகுதியைச் சேர்ந்தவர் மைக்கேல் ராஜ் இவர் தனது டாடா ஏஸ் வண்டியில் பல வியாபாரம் செய்து வருகிறார் இவருக்கு உதவியாக சாயல்குடி சித்திக் தெரு பகுதியைச் சேர்ந்த அசாருதீன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த எட்டாம் தேதி இரவு மைக்கேல் ராஜ் தனது டாடா ஏஸ் வாகனத்தை முத்தையாபுரம் பகுதியில் நிறுத்தி பழ வியாபாரம் செய்து கொண்டு இருந்துள்ளார் அப்போது அங்கே அருகே மீன் கடை வைத்து இருந்த முத்தையாபுரம் வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்த புகழேந்தி மிரட்டியுள்ளார்.