திருச்செந்தூர்: அமலிநகர் கடற்கரை பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் உடல் கரை ஒதுங்கியதால் பரபரப்பு
திருச்செந்தூர் முருகன் கோவில் தென்புறமாக உள்ள அய்யா கோவில் பின்புறம் உள்ள அமலிநகர் கடற்கரை பகுதியில் இன்று காலையில் பெண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியதாக மரைன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மரைன் போலீசார் உடலை கைப்பற்றினர். கரை ஒதுங்கிய பெண்ணின் சடலம் சுமார் 45 வயது இருக்கும்