தருமபுரி: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் முத்தரப்பு கூட்டம் கலெக்டர்.ரெ.சதீஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் விவசாயிகளிடமிருந்து ராகி நேரடியாக கொள்முதல் செய்ய தருமபுரி வட்டம், திருப்பத்தூர் மெயின்ரோடு, மதிகோண்பாளையம், ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் பென்னாகரம் வட்டம், வண்ணாத்திப்பட்டி, வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கட்டிட வளாகம் ஆகிய இரண்டு இடங்களில் 24.11.2025 முதல் ராகி நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளது.