ஏரல்: புல்லாவெளி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த2 சரக்கு வாகனங்களில் கொண்டு வரப்பட்ட ரூ.80 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல் 2 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புல்லாவெளி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக 2 சரக்கு வாகனங்களில் கொண்டு வரப்பட்ட ரூ.80 லட்சம் மதிப்பிலான 60 கிலோ பீடி மூட்டைகள் க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு காந்திநகரை சார்ந்த மதியழகன் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வெள்ளாளன் விளை பகுதியைச் சேர்ந்த விஷ் பண் ராஜ் பெயின் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.