தருமபுரி: பழையதர்மபுரி லிங்கேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் தரிசனம்.
தர்மபுரி அடுத்த பழைய தர்மபுரி லிங்காரத்தில் உள்ள லிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர் இதையொட்டி நேற்று பழைய தர்மபுரி விநாயகர் கோயிலில் இருந்து ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக சென்று கோயிலை அடைந்தனர். ஊர்வலத்தில் லிங்கேஸ்வரா, காசி சுவாமி வேடம் அணிந்து சென்றது பக்தர்களை பரவசப்படுத்தியது. இதையடுத்து கோயிலில் லிங்கேஸ்வரருக்கு அபிஷேகம் நடந்தது.