நிலக்கோட்டை, வீருவீடு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன்கள் 2 பேர், தம்பி மகன் 1 ஆகிய 3 பேருக்கு பொதுப்பணித்துறையில் வேலை வாங்கித் தருவதாக அரசு பேருந்து நடத்துனரான பெருமாள்கோவில்பட்டியை சேர்ந்த மாரிமுத்து, கரூரை சேர்ந்த குமார் உள்ளிட்ட சிலர் பல்வேறு தவணைகளாக ரூ.36.10 லட்சத்தை பெற்றுக் கொண்டு அரசு வேலை வாங்கித் தராமல் தலைமறைவான மாரிமுத்து, குமார், அவரது மனைவி பூமகள், உறவினர் சுசித்ரா ஆகியோரை கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான கரூரை சேர்ந்த கவுரிசங்கரை போலீசார் கைது செய்தனர்