தூத்துக்குடியில் ஜாக்டோ ஜியோ சார்பில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து உடனடியாக பழைய பென்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் காலிப்பணியிடங்கள் நிரப்ப வேண்டும் அரசாணை 243 ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் நடைபெற்றது. இதில் ஏராளமான அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.