தூத்துக்குடி: தொடரும் கனமழையால் வெள்ள எச்சரிக்கை ஆற்றங்கரையோர பொது மக்கள் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ வேண்டாம் ஆட்சியர் எச்சரிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி, மருதூர் அணைக்கட்டிலிருந்து சுமார் 15250 கன அடியும் , திருவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து சுமார் 11060 கனஅடி நீரும் வெளியேறி தாமிரபரணி ஆற்றில் சென்று கொண்டிருக்கிறது. அதே போல், கோரம்பள்ளம் அணைக்கட்டில் இருந்து சுமார் 1000 கன அடி நீர் உப்பாத்து ஓடையில் திறந்து விடப்பட்டுள்ளது.