தூத்துக்குடி: சிவன் கோவில் அருகே யாசகம் எடுத்து வாழ்ந்து வந்த முதியவர் மழைக்கு பரிதாபமாக பலி
தூத்துக்குடியில் உள்ள பாகம்பரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தின் வெளியே குடும்பத்தினர் ஆதரவு இல்லாத ஏராளமானோர் யாசகம் எடுத்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் சிவன் கோவில் சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் படுத்து இருந்து தங்கள் வாழ்க்கையை கழித்து வருகின்றனர். இந்த நிலையில் சிவன் கோவில் அருகே தர்மம் எடுத்து வாழ்ந்து வந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நேற்று இரவு சிவன் கோவில் அருகே படுத்து தூங்கியவர் உயிரிழந்தார்.