திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள பொன்னகரம் அரசு ஐடிஐ அருகில் இருந்த கேசவன் தண்ணீர் டிராக்டர் வைத்துக்கொண்டு புதிதாக கட்டும் கட்டிடங்கள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தண்ணீர் சப்ளை செய்யும் வேலையில் ஈடுபட்டு வந்து கொண்டிருக்கிறார். கேசவன் இல்லாமல் வேறொருவர் தண்ணீர் டிராக்டரை எடுத்துச் செல்வதாக பொதுமக்கள் அறிந்தனர். உடனடியாக அந்த நபரை திருமலை செல்லும் சாலையில் விரட்டிச் சென்ற பொதுமக்கள் பிடிக்க முயன்ற போது டிராக்டரை ஏற்றும்படி சென்றுள்ளனர்.