தூத்துக்குடி மாவட்டத்தில் பெண் காவலர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் அவர்களின் திறமையை மேம்படுத்தும் விதமாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், பெண் காவலர்களுக்கு இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற ஏற்பாடு செய்யுமாறு ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். அதன்படி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று 8 பெண் காவலர்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வாழ்த்து தெரிவித்தார்.