ஓட்டப்பிடாரம்: தருவைகுளத்தில் மீனவர்களின் வலைகள் திருட்டு திருடப்பட்ட பல லட்ச ரூபாய் மதிப்புள்ள வலைகள் ஒரு விசைப்படகில் இருந்ததால் பரபரப்பு
தூத்துக்குடி அருகே உள்ளது தருவைகுளம் மீனவ கிராமம் இந்த மீனவ கிராமத்தில் சுமார் 250 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் 150 க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் விசைப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மீன்பிடி படகுகளில் இருந்து வலைகள் சிலிண்டர்கள் மற்றும் சமையல் அடுப்பு மீன்பிடி உபகரணங்கள் ஆகியவை தொடர்ந்து காணாமல் போய் வந்துள்ளது.