சிவகங்கை அருகே உள்ள கூத்தாண்டம் பகுதியில் வசிக்கும் தமிழ்ச்செல்வி (38) தனது நாயை கொண்டு கோகுல கண்ணன் என்பவரின் ஆடுகளை கடிக்கவிட்டதாகவும், இதனால் ஒரு மாதத்திற்கு முன்பு ஆடுகள் பல உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கோகுல கண்ணன் பிரச்சனை எழுப்பி, தமிழ்ச்செல்வியின் வீட்டின் ஜன்னல் கண்ணாடி உடைத்தார்.