குஜிலியம்பாறை: கூம்பூரில் கிணற்றுக்குள் விழுந்த ஆட்டுக்குட்டியை மீட்ட தீயணைப்புத்துறையினர்
சின்ன ராவுத்தன்பட்டியைச் சேர்ந்த ஆட்டு வியாபாரி பெருமாள் ஒரு வாகனத்தில் ஆடுகளை விலைக்கு வாங்கி ஏற்றி வந்தார். அதில் ஒரு ஆடு மட்டும் வாகனத்தில் இருந்து குதித்து ஓடியது. பிடிப்பதற்காக பின்னால் விரட்டிச் சென்ற பொழுது தவறி கிணற்றுக்குள் விழுந்தது. இதனை எடுத்து ஆட்டை மீட்பதற்காக குஜிலியம்பாறை தீயணைப்பு நிலையத்திற்கு பெருமாள் தகவல் கொடுத்தார். குஜிலியம்பாறை தீ இணைப்பு நிலையத்தினர் கிணற்றுக்குள் இறங்கி கயிறு மூலம் ஆட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.