வேலூர்: தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து சத்துவாச்சாரியில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
தேர்தலுக்கான வாக்குறுதியை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து ஜாக்டோ ஜியோ சார்பில் வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்