பென்னாகரம்: பென்னாகரம் மற்றும் பாலக்கோட்டில் பாமகவின் தமிழக மக்கள் உரிமை மீட்பு பொதுக் கூட்டம்
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு பேருந்து நிலையத்தில், பாமக சார்பில் தமிழக மக்கள் உரிமை மீட்பு பொதுக் கூட்டம் நேற்று இரவு 9 மணி அளவில் நடந்தது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசுகையில் இது பொதுக் கூட்டமா? மாநாடு என தெரியவில்லை, இதுதான் ரத்த பாசம் என்பது, கோடிக்கணக்கான தம்பிகளும், தங்கைகளும் பாசத்துடன் உள்ளனர்.