தூத்துக்குடி: தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது அய்யனடைப்பில் கனிமொழி எம்பி பேட்டி
தூத்துக்குடியில் அய்யனடைப்பு பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனை இன்று பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி திறந்து வைத்து பயனாளிகளுக்கு வீட்டிற்க்கான சாவியை வழங்கினார். இதில் அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், எம்.சி.சண்முகையா எம்எல்ஏ., மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.