ஏரல்: நாசரேத் அம்பலச்சேரி பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அரிவாளுடன் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட 6 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகேயுள்ள அம்பலச்சேரியை சேர்ந்தவர் கணேசன் மகன் ராமசுப்பிரமணியன் (34). மற்றும் இவரது நண்பர்கள், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அரிவாளுடன் இருப்பது போன்று வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இதையடுத்து மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் சாத்தான்குளம் டிஎஸ்பி ஆவுடையப்பன் தலைமையில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.