கடந்த 13.09.2025 அன்று முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுச் சொத்தை சேதப்படுத்திய வழக்கில் சம்பந்தப்பட்ட வல்லநாடு பாறைக்காடு பகுதியைச் சேர்ந்த கணபதி மகன் இசக்கிதுரை (27) என்பவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் உத்தரவின் பேரில் இன்று முறப்பாடு காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.