தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா தலைமையில் நடைபெற்றது. மண்டல தலைவர் அன்னலட்சுமி கோட்டுராஜா முன்னிலை வகித்தார். முகாமை தொடங்கி வைத்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசும் பொழுது "பாதாளக் சாக்கடை திட்டத்தில் இதுவரை இணைப்பு பெறாதவர்களுக்கு இணைப்பு பெற வேண்டும். அப்போதுதான் இந்த பகுதியில் சாலைகள் அமைக்க முடியும். மேற்கு மண்டலத்தில் மட்டும் 110 சாலைகள் போட வேண்டியுள்ளது. மழைக்காலம் முடிந்ததும் பணிகள் நடைபெறும் என்றார்.