ஓட்டப்பிடாரம்: பாஞ்சாலங்குறிச்சியில் 750 மாணவ மாணவிகள் சுமார் ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி, கராத்தே, யோகா பரதநாட்டியம் ஆடி, கீபோர்டு வாசித்து டிவைன் உலக சாதனை
தூத்துக்குடியில் வீரத்தமிழன் போர் கலை சிலம்ப கூடம் தமிழ்நாடு அமைப்பு சார்பில் நமது உடற்பயிற்சி மற்றும் நமது உடல் நலம் என்ற தலைப்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு போதைப் பொருட்களை நாடாமல் உடற்பயிற்சி மற்றும் உடல் நலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிலம்பம், கராத்தே, யோகா, மியூசிக் மற்றும் பரதநாட்டியம் ஆகியவை ஒன்றாக செய்து டிவைன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்கான உலக சாதனை நிகழ்வு இன்று நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை வளாகத்தில் வைத்து சாதனை நடைபெற்றது.