ஓட்டப்பிடாரம்: ஓட்டப்பிடாரத்தில் பாலியல் புகாருக்கு உள்ளான வேளாண்மை துறை உதவி இயக்குனர் பணியிடை நீக்கம் சென்னை வேளாண்மை துறை இயக்குனர் உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் வேளாண்மை துறையில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருபவர் அறிவழகன் இவர் ஓட்டப்பிடாரம் வேளாண்மை துறை அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்த திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. மேலும் உதவி இயக்குனர் அறிவழகன் இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசும் ஆடியோவும் வெளியானது.