ஏரல்: நாசரேத்தில் ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் திருமறையூர் ஐ.எம்.எஸ் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் மகன் சித்தர் ராஜா டேவிட் சாமுவேல். இவர் மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் தொழிற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராஜாத்தி ஈரோடு மாவட்டம் பவானிசாகர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.