திருச்செந்தூர்: வீரபாண்டியபட்டினம் கடற்கரை பகுதியில் இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.1 கோடியே 25லட்சம் மதிப்பிலான மாத்திரைகள், ஊசி மருந்துகள் க்யூ பிரிவு போலீசார் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டிய பட்டினம் கடற்கரை பகுதியாக இருந்து இலங்கைக்கு பல்வேறு பொருட்கள் கடத்தப்படுவதாக க்யூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதாவிற்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து வீரபாண்டிய பட்டினம் கடற் பகுதியில் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.