தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி இன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன், சார்பு ஆய்வாளர் காவுராஜன் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து வாகனம்-I சிறப்பு சார்பு ஆய்வாளர் சந்தனசேகர் மற்றும் காவலர் ஆறுமுகநயினார் ஆகியோர் செய்துங்கநல்லூர் அருகில் உள்ள ஒரு கொரியர் சர்வீஸின் குடோனை சோதனை செய்தனர். மேலும் அங்கு இருந்த தடை செய்யப்பட்ட சுமார் 112 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர்.